Today’s Live: ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள்..! ஜூன் 13 தேதி தொடக்கம்..!

LIVE NEWS

ஸ்குவாஷ் உலகக்கோப்பை: 

ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள், சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெறும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். போட்டிகள் ஜூன் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட 8 நாடுகள் கலந்துக்கொள்ள உள்ளன.

22.05.2023 4:15 PM

சரத்பாபு மரணம் :

மூத்த தமிழ் நடிகர் சரத்பாபு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன் உயிரிழந்தார். தமிழில் நாயகன், குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் நடித்து திரையுலைகையே திரும்பிப்பார்க்க வைத்தவர் சரத்பாபு. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

22.05.2023 2:55 PM

பள்ளிகள் திறப்பு:

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் முன்பே அறிவிக்கப்பட்டது.

22.05.2023 1:45 PM

‘AK Moto Ride’ சுற்றுலா நிறுவனம்:

நடிகர் அஜித்குமார் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை  தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஜித்குமார் சார்பில் அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

22.05.2023 1:00 PM

பதவிப் பிரமாணம்:

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டேவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார்.

22.05.2023 12:22 PM

ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்:

2000 நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு ஆர்பிஐ புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் காத்திருப்பதற்கான பந்தல்கள், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும். தினமும் எத்தனை 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு வேறு ரூபாய் நோட்டுகள் அளிக்கப்பட்ட விவரம், 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்ட விவரத்தையும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

22.05.2023 11:30 AM

நாட்டின் உயரிய விருதுகள்:

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி’ விருதை அந்நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகாவால் வழங்கப்பட்டது. பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிப்பதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது, ஃபிஜியர்கள் அல்லாத ஒரு சிலரே இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

மேலும், பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்கான காரணத்திற்காகவும், உலகளாவிய தெற்கின் காரணத்தை முன்னெடுத்துச் சென்றதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, பப்புவா நியூ கினியா, கம்பேனியன் ஆஃப் ஆர்டர் ஆஃப் லோகோஹு விருதை வழங்கியது

22.05.2023 10:45 AM

இனி ஆன்லைனில் மட்டுமே வரிவசூல்:

கிராம ஊராட்சிகளில் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரிவசூல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், கிராம ஊராட்சிகள் மக்களிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது, ஆன்லைன் மூலம் மட்டுமே பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி வீடு, சொத்து, குடிநீர் ஆகிய வரிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். மேலும், புதிய கட்டடங்களுக்கு அனுமதியும் ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்கப்படும்.

22.05.2023 9:30 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்