Today’s Live: சென்னை – பினாங்கு நேரடி விமான சேவை தொடங்க நடவடிக்கை..!
நேரடி விமான சேவை :
சென்னை – பினாங்கு இடையே நேரடி விமான சேவை தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அனுப்பிய பதில் கடிதத்தில் சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான சேவை தொடங்க தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
2023-03-06 05:35 PM
முதலீட்டு மோசடி:
பங்கஜ் மெஹாடியா, லோகேஷ் மற்றும் கேத்திக் ஜெயின் ஆகியோரின் முதலீட்டு மோசடி தொடர்பாக நாக்பூர் மற்றும் மும்பையில் 15 இடங்களில் அமலாக்க இயக்குநரகம் தேடல்கள் மற்றும் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அதில் ரூ.5.51 கோடி பணம் மற்றும் ரூ.1.21 கோடி மதிப்புள்ள கணக்கிடப்படாத நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Maharashtra | ED has conducted searches & survey at 15 locations in Nagpur & Mumbai in relation to the investment fraud by Pankaj Mehadia, Lokesh & Kathik Jain. Unaccounted jewellery worth Rs 5.51 crore and cash Rs 1.21 crore has been seized. Further investigation is underway:ED pic.twitter.com/xXMrq7eXw1
— ANI (@ANI) March 6, 2023
2023-03-06 04:32 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் வீடியோ :
கோவையில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உடன் ஆலோசனை நடத்திய பின்னர் பீகார் அதிகாரிகள் குழு அளித்த பேட்டியில், புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வீடியோக்கள் போலி என்பது உறுதியாகியுள்ளது என்று கூறினர். இந்த வீடியோக்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தற்போது அந்த அச்சம் தணிந்து வருவதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.
2023-03-06 03:19 PM
டெல்லி கலால் கொள்கை வழக்கு :
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, தனது சிபிஐ ரிமாண்டின் முடிவில், சிபிஐ தலைமையகத்திலிருந்து ரூஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
Readmore : மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு – டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு
2023-03-06 01:49 PM
நாம் தமிழர், ஆதித் தமிழர் இடையே மோதல் :
சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சி, ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருந்ததியினர் குறித்து சீமான் சர்ச்சையாக பேசியதாக புகார் எழுந்த நிலையில் ஆதித்தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கல் வீசி தாக்கியதில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் கண்ணாடி சேதமடைந்துள்ளது.
Readmore : பரபரப்பு: நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு.. இரு தரப்பினர் இடையே மோதல்!
2023-03-06 12:57 PM
இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜர்:
தோஷகானா உள்ளிட்ட 3 வழக்குகளில் பாதுகாப்பு ஜாமீன் கோரி இம்ரான் கான் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2023-03-06 12:48 PM
தேசிய மருந்தியல் கல்வி தினம் :
டெல்லியில் தேசிய மருந்தியல் கல்வி தினத்தன்று, மத்திய சுகாதாரத் துறை டாக்டர் பாரதி பிரவின் பவார், பார்மா அன்வேஷனைத் தொடங்கி வைத்தார். இந்தியாவின் பார்மசி கல்வியின் தந்தையான பேராசிரியர் எம்.எல்.ஷ்ராஃப் அவர்களின் பிறந்தநாளான மார்ச் 6 ஆம் தேதியை ‘தேசிய மருந்தியல் கல்வி தினமாக’ இந்திய பார்மசி கவுன்சில் கொண்டாடுகிறது.
2023-03-06 11:45 AM
முதல்வர் ட்வீட் :
நாம் செல்லுகின்ற #DravidianModel பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று!
“ஏ தாழ்ந்த தமிழகமே!” எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு! பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்!”
நாம் செல்லுகின்ற #DravidianModel பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று!
“ஏ தாழ்ந்த தமிழகமே!” எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு! பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்! pic.twitter.com/ygbPfw7qmZ
— M.K.Stalin (@mkstalin) March 6, 2023
2023-03-06 11:30 AM
மோசடி வழக்கு:
மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 45 வயது நபர் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். உயிழந்தவர் ஆனந்த் வர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2023-03-06 11:00 AM
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம்:
படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. பிரபாஸ் நடிக்கும் ப்ராஜக்ட் கே படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் நடந்து வருகிறது. ஒரு ஆக்ஷன் காட்சியின் போது, அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
2023-03-06 10:38 AM
மேகாலயா எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு:
மேகாலயாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களுக்குப் பிறகு பதவிப் பிரமாணம் செய்யத் தயாராகிவிட்டனர்.