நாகலாந்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். போடோ பிரச்சனையை தீர்த்தோம், கர்பி ஆங்லாங் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம் என்று கூறினார். நாகாலாந்து அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்பதை நாகாலாந்து மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா மேலும் கூறினார்.
பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (எஃப்ஐஏ) பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானை தடைசெய்யப்பட்ட நிதியுதவி வழக்கில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சிந்தா நகர், மாதவ காடு ஆகிய இடங்களில் வாக்காளர்களுக்கு குக்கர், கொலுசு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகார்கள் தொடர்பாக மத்தியப்படை வீரர்கள் பாதுகாப்புடன் தேர்தல் பறக்கும் பணியினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக கூறப்படும் பகுதிகளில் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகள் மற்றும் 3 பெண்கள் தனிச்சிறையில் கைதிகள் துணி துவைக்க, சிறைத்துறை சார்பில் ரூ.60 லட்சம் செலவில் வாஷிங் மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளன. இதனால் ஒரே நேரத்தில் 100 கிலோ துணிகளை துவைக்கலாம். இந்த திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் வர உள்ளதால், நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் ரோஸ்கர் மேளாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில மாதங்களுக்கு முன் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி நியமன கடிதம் வழங்கியது.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. உத்தரகாண்டில் உள்கட்டமைப்பிற்காக நிறைய முதலீடு செய்யப்படுகிறது, இது தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்வதை எளிதாக்கும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பை உருவாக்கும். என்று கூறினார்.
2023-02-20 11:34 AM
சத்தியமங்கலதில் உள்ள எம்.கே.நகரில் வசித்து வரும் விவசாயி ராமசாமி என்பவரின் வீட்டில் சுமார் 45 சவரன் மதிப்புள்ள நகை மற்றும் ரூ.3.70 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராமசாமி அளித்த புகாரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2023-02-20 10:39 AM
“நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்!” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
2023-02-20 10:21 AM
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…