11.05.2023 10:40 AM
இம்ரான்கானை விடுவிக்க வேண்டும்:
கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கில் கடந்த 9ம் தேதி கைது செய்யப்பட்ட அவரை விடுதலை செய்யக்கோரி அவரது சார்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், அவரை இன்னும் ஒரு மணி நேரத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11.05.2023 6:40 PM
NHRC நோட்டீஸ்:
பாலியல் துன்புறுத்தல் புகார்களை நிவர்த்தி செய்ய சட்டப்படி உள்ளக புகார்கள் குழுவைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், SAI, BCCI, WFI மற்றும் 15 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
11.05.2023 5:30 PM
33வது இடம்:
தமிழக அமைச்சரவையில் புதிததாக இணைந்துள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர்கள் வரிசையில் 33வது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் அமைச்சரவையில் இணைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வரிசையில் 10வது இடம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் 28-ஆவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில், புதிததாக இணைந்துள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
11.05.2023 4:30 PM
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து:
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதன்படி, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிதித்துறை, மனித வளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் முதல்வரை நேரடியாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
11.05.2023 3:45 PM
அவசர உயர்மட்டக் கூட்டம் :
பெண் மருத்துவர் நோயாளியால் குத்திக் கொல்லப்பட்டதையடுத்து, சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பது தொடர்பாக அவசர உயர்மட்டக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
11.05.2023 2:05 PM
புகையிலை பொருட்களுக்கு தடை:
தீங்கு விளைவிக்கும் புகையிலைக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹான்ஸ்சில் 1.8% நிகோடின் கலந்துள்ளது. இது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனுமதிக்க முடியாது என அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று, தீங்கு விளைவிக்கும் எந்தவொரு புகையிலை பொருட்களை தடை விதிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11.05.2023 1:10 PM
முதலமைச்சருக்கே அதிகாரம்:
டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யப்படுவதில் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது. அரசுக்கு அதிகாரம் வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும். மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
11.05.2023 12:10 PM
என்ஐஏ சோதனை:
ஜமாத்-இ-இஸ்லாமி பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் 11 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.
11.05.2023 11:45 AM
இலாகா மாற்றம்:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசு நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மை, ஓய்வூதியம், புள்ளியியல் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த தொல்லியல் துறையும் அவரே கவனிப்பார். தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ்வளர்ச்சித்துறை. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11.05.2023 11:30 AM
புயல் எச்சரிக்கை கூண்டு:
வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
11.05.2023 11:00 AM
மருத்துவர்கள் வேலை நிறுத்தம்:
கேரளாவில் போதைக்கு அடிமையான கைதி சந்தீப் என்பவரால் மருத்துவர் வந்தனா தாஸ் கத்தியால் குத்தி கொடூரமா கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து கேரளா முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சேவைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர சட்டம் நிறைவேற்ற அவர்கள் கேரள முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
11.05.2023 10:40 AM
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…