12.05.2023 10:30 AM
தில்லு தாஜ்பூரியா கொலை வழக்கு:
தில்லு தாஜ்பூரியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரின் போலீஸ் காவலை அடுத்த 3 நாட்களுக்கு நீட்டித்து டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் யோகேஷ் துண்டா, தீபக் தபாஸ், ராஜேஷ் பவானா, ரியாஸ் கான், சவானி மற்றும் அதா உர் ரஹ்மான். குற்றம் சாட்டப்பட்டவர் மே 15 திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்படுவார்.
12.05.2023 5:10 PM
இம்ரான் கானுக்கு ஜாமீன்:
அல்-காதர் அறக்கட்டளை நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
12.05.2023 4:20 PM
உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்:
மே 20-ல் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதோடு, அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ள இக்கூட்டத்தில், அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
12.05.2023 3:29 PM
கர்நாடக மக்களுக்கு நன்றி:
காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த 6.5 கோடி கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாளை வரை காத்திருப்போம், முடிவுகள் வெளியாகும் வரை. பாஜக தோல்வியை ஒப்புக்கொண்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும், கர்நாடக மக்களுக்கு நாங்கள் சேவை செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
12.05.2023 1:15 PM
தேர்வு முடிவுக்கு தடை கோரி வழக்கு:
குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுக்கு தடை கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 19 கேள்விகளின் விடை தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது என ஆதாரத்துடன் கூறியும், வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்கவில்லை. எனவே தேர்வு முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என லட்சுமண குமார் என்பவர் தொடுத்த வழக்கில், டிஎன்பிஎஸ்சி செயலாளர் ஜூன் 19க்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
12.05.2023 12:40 PM
பதவி உயர்வுக்கு தடை :
குஜராத் மாவட்ட நீதிமன்றங்களில் 68 நீதிபதிகளில் சில நீதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எச்.எச்.வர்மாவுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
12.05.2023 11:40 AM
ஐஎம்டி விஞ்ஞானி தகவல்:
மத்திய வங்கக் கடல் பகுதியை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மோச்சா புயல் மேலும் தீவிரமடைந்துள்ளது. தற்போது அது வடக்கு திசையை நோக்கி மணிக்கு 9 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று ஐஎம்டி விஞ்ஞானி உமாசங்கர் தாஸ் கூறியுள்ளார்.
12.05.2023 11:10 AM
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவு:
சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம். http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 87.33% மாணவ, மாணவிகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12.05.2023 10:50 AM
போதைப்பொருள் பறிமுதல்:
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காந்தி நகர் போலீசார் நேற்று 31 வயது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அகோதிகே ன்னாமேகா என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 11 கிராம் போதைப்பொருள் எம்.டி.எம்.ஏ மற்றும் ஒரு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
12.05.2023 10:30 AM
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…