சிக்கிமில் கடும் பனிப்பொழிவு:
கிழக்கு சிக்கிமில் கடும் பனிப்பொழிவு காரணமாக நாது லா & சோம்கோ (சாங்கு) ஏரியில் சிக்கித் தவித்த 370 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவம் இன்று மீட்டது. சிவில் போலீஸ் மற்றும் சிவில் நிர்வாகத்துடன் த்ரிசக்தி கார்ப்ஸின் துருப்புக்கள் உடனடியாக நடவடிக்கைக்கு வந்து மீட்பு பணியை ஆபரேஷன் ஹிம்ராஹத் தொடங்கியது.
எம்ஐ-17 ஹெலிகாப்டர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பீல்வா கிராமத்தில் இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர் முன்னெச்சரிக்கையாக தரையிறங்கியது. அதிகாரிகளால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அது பாதுகாப்பாக புறப்பட்டு, தற்போது பலோடி விமான தளத்தை அடைந்துள்ளது என்று இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5 கிலோ ஹெராயின் பறிமுதல்:
அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லையில் உள்ள காட்க்தி பகுதியில் ஒரு வாகனத்தில் இருந்து 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ ஹெராயின் அடங்கிய 390 சோப்புகளை காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் கூட்டு நடவடிக்கையில் மீட்டனர். ஒரு குற்றவாளி பிடிபட்டதாகவும், மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அசாம் போலீசார் தெரிவித்தனர்.
ஆபரேஷன் திரிசூல்:
ஆபரேஷன் திரிசூல் மூலம் ஒரு வருடத்தில் நாடு கடத்தப்பட்ட 33 குற்றவாளிகளை சிபிஐ கைது செய்தது.
ஆன்லைன் ரம்மி விவகாரம் :
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி திமுக சார்பில் எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டிஸ் அளித்துள்ளார்.
ஜி.கே.வாசன் வலியுறுத்தல் :
சென்னையில் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ள பழுதடைந்த சாலைகளை தமிழ்நாடு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து சீரமைக்க தமாக தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
நரேந்திர மோடி ரோடு ஷோ :
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்தியபோது பாஜக ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மலர் தூவினர். மாண்டியா தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ள பிரதமர், மைசூரு-குஷால்நகர் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுவார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு :
சென்னையில் நடந்த ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 4 வருட உழைப்புக்கு பின்புதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று கூறினார்.
இந்திய ராணுவம் நடவடிக்கை :
ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் ஜாங்கர், நௌஷேரா ஆகிய இடங்களில் நடத்திய நடவடிக்கையில் இரண்டு அதிநவீன துப்பாக்கிகள், இரண்டு கிலோ போதைப்பொருள் மற்றும் இரண்டு கிலோ ஐஇடி ஆகியவை வெற்றிகரமாக மீட்கப்பட்டன.
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு :
மதுரை விமானநிலையத்தில் அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் என்பவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் 5 பேர் மீது மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிஐஎஸ்எப் (CISF) ரைசிங் தினம் :
தெலுங்கானாவில் 54-வது சிஐஎஸ்எப் (CISF) ரைசிங் தின அணிவகுப்பை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள என்ஐஎஸ்எ (NISA) இல் பாபில் ரேஞ் அர்ஜுனா -ஐ (Baffle Range ‘Arjuna’) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…