தீ விபத்து :
குஜராத் மாநிலத்தில் உள்ள பொடாட் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை உள்ளூர் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் இன்று மாலை அகமதாபாத் புறப்பட இருந்தது. காயங்கள் எதுவும் இல்லை.
17.04.2023 5:30 PM
பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு :
விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை நடத்திவரும் நிலையில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.
17.04.2023 4:00 PM
ஜாதிவாரி கணக்கெடுப்பு:
ஓபிசி மக்களுக்கு அதிகாரமளிக்க புதுப்பிக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அக்கடிதத்தில், ‘ஓபிசியினருக்கு சமூகநீதி அதிகாரமளிக்க ஜாதிவாரியான கணக்கெடுப்பு மிக அவசியமான நம்பகம் மிக்க தரவுத்தளமாக மாறும். மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இதை இணைந்து மேற்கொள்ள வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.
17.04.2023 3:45 PM
கவன ஈர்ப்பு தீர்மானம் :
தமிழக மக்களுக்காக பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் சிலை லண்டனில் கறுப்புத் துணியால் மூடப்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ். இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், இது குறித்த விவரங்களை அரசு அறிந்து சரியான நடவடிக்கைகளை எடுத்து சட்டசபையில் தெரிவிப்போம் என்று உறுதி அளித்தார்.
17.04.2023 1:50 PM
ஆரே வன மர வழக்கு :
மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (எம்.எம்.ஆர்.சி.எல்) ஆரே வன மர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை மீற முயற்சித்ததற்காக உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அதிக மரங்களை வெட்ட முயன்றதற்காக மும்பை மெட்ரோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. இந்தத் தொகையை வனப் பாதுகாவலரிடம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
17.04.2023 1:20 PM
மீன் விலை உயர வாய்ப்பு :
தமிழகத்தில் மீன் பிடித் தடைக்காலம் நேற்று தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைகாலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. மீன்பிடி தடைகாலங்களில் மீன்களின் விலை அதிகமாக உயரும். அந்த வகையில் விரைவில் மீன் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17.04.2023 12:50 PM
கலாச்சேத்திரா விவகாரம்:
பெயரை வெளியிட விரும்பாத 7மாணவிகள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு, கலாஷேத்ரா பதில்தரவும், கலாச்சேத்திரா விவகாரத்தில் மகளிர் ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17.04.2023 11:50 AM
கூடுதலாக 1 இழப்பீடு:
திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்திய அண்ணாமலை ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் என திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். தற்போது அண்ணாமலை, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் ரூ.84 கோடி நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளார். எனவே, பொதுவெளியில் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்ததற்கு ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என அறிவித்துள்ளார்.
17.04.2023 11:00 AM
முதலமைச்சர் நிவாரணம் :
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Readmore : துபாய் தீ விபத்து – முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!
17.04.2023 10:35 AM
ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் :
தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இருந்து விலகினார் ஜெகதீஷ் ஷெட்டர். பாஜகவில் இருந்து விலகிய நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
17.04.2023 10:20 AM
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…