Today’s Live : இந்தூர் கோயில் கிணறு இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழப்பு..!

Default Image

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ள படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த படிக்கட்டுக் கிணற்றில் சிக்கியவர்களில் 19 பேர் மீட்கப்பட்டுவுள்ள நிலையில், உயிரிழந்த எண்ணிக்கை 13 பேர் ஆக அதிகரித்துள்ளது.

ஊதிய உயர்வு :

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பட்ஜெட் மீதான விவாதத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளருக்கு வரும் ஏப்ரல் 2 முதல் நாள் ஒன்றுக்கு 281 ரூபாயில் இருந்து 294 ரூபாயாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

30.03.2023 3.40 PM

ராம நவமி ஷோபா யாத்திரை :

குஜராத்தில் ராம நவமி ஷோபா யாத்திரையின் போது வதோதராவில் இன்று கல் வீச்சு நடந்தது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதியில் அமைதி நிலவுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.


30.03.2023 3.15 PM

தற்காலிக தலைமை நீதிபதி :

நீதிபதி டி.எஸ்.சிவஞானம், மார்ச் 31 முதல், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

30.03.2023 1.06 PM

காங்கிரஸ் கட்சி :

குப்பி தொகுதியின் ஜேடிஎஸ் எம்எல்ஏ ஸ்ரீனிவாஸ் பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


30.03.2023 12.50 PM

பிரதமர் போபால் செல்கிறார்:

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 1-ம் தேதி போபால் செல்கிறார். போபாலில் உள்ள குஷாபாவ் தாக்ரே ஹாலில் உள்ள ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு-2023ல் பிரதமர் கலந்து கொள்கிறார். போபால் மற்றும் புது தில்லி இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

30.03.2023 12.00 PM

அட்டவணை வெளியீடு :

சென்னை – கோவை இடையே தொடங்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 12.10 மணிக்கு சென்னை வந்தடையும். பிறகு சென்னையில் இருந்து பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும்.

30.03.2023 10.55 AM

தொலைபேசி வாயிலாக இரங்கல் :

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு அஜித்திடம் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தார். நடிகர் அஜித், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

30.03.2023 10.10 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்