Today’s Live: பிபிசி-ல் சோதனை..! வருமான வரித்துறை விளக்கம்..!

Default Image
பிபிசி சோதனை – வருமான வரித்துறை விளக்கம் :

மும்பை பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பிபிசி குழும நிறுவனங்கள் கணக்கில் காட்டிய வருவாயும் இந்தியாவில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore : பிபிசி வருமானத்தில் குளறுபடி.? விதிமீறி வெளிநாட்டுக்கு பணம்.? வருமான வரித்துறை விளக்கம்.!

மேலும் ஊழியர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் உரிய நேரத்தில் விவாதிக்கப்படும் என்றும் சில பணப்பரிமாற்றங்களுக்கு வரி செலுத்தப்படவில்லை என்றும் வருமான வரித்துறை  தெரிவித்துள்ளது.

2023-02-17 06:14 PM

ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை : 

ஹரியானாவில் பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா, ஆதாரங்கள் இல்லாததால் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ராஜ்குமார் யாதவ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 1996 ஆம் ஆண்டு சோனிபட் குண்டுவெடிப்பு வழக்கில் அஜ்மீர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023-02-17 05:31 PM

துருக்கி நிலநடுக்கம் :

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் பல்வேறு பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு திரும்பிய இந்தியாவின் என்டிஆர்எப் (NDRF) வீரர்கள் அதானா விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

2023-02-17 02:08 PM
கிம் ஜாங் உன்னின் புதிய உத்தரவு :

வடகொரியா அதிபர் கிம் ஜாங் தன் மகளின் பெயரை வேறு எந்த பெண்ணிற்கும் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயரை வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore : வட கொரியா பிரதமர் கிம் ஜாங் உன்னின் புதிய உத்தரவு..!

North Korea's top military officer dismissed - Kim Jong-un action
[Image Source: Reuters]
2023-02-17 01:08 PM
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு எதிரொலி :

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டின்போது காணாமல் போன நாமக்கல் மீனவரின் உடல் மேட்டூர் பாலாற்றங்கரையில் இறந்த மீனவர் உடல் மீட்கப்பட்டதால் இருமாநில எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாலாறு வழியாக தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

2023-02-17 12:26 PM
மருத்துவக் கழிவுகள் தடுப்பு :

மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்காத நெல்லை ஆட்சியர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் மருத்துவக்கழிவுகள் கொட்டுவது தொடர்பான வழக்கில், தமிழகத்தில் பிற மாநிலங்களில் இருந்து மருத்துவக்கழிவுகளை கொட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Readmore : மருத்துவ கழிவுகள்! கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை.!

madurai high court

2023-02-17 11:16 AM
பிசிசி தேர்வுக்குழு தலைவர் பதவிலிருந்து சேத்தன் சர்மா விலகல் :

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து சேத்தன் சர்மா விலகினார். தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா அனுப்பிய ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுக்கொண்டார்.

Readmore : பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து சேத்தன் சர்மா விலகல்..!

ChetanSharma
[Image Source : Twitter/@TV9MPCG]
2023-02-17 10:57 AM

வீடு கட்டுவதற்கு முன் மின் இணைப்பு வழங்கலாம் :

கட்டட முடிவு சான்று இல்லாமல் அதாவது வீடு கட்டுவதற்கு முன் மின் இணைப்பு வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்புககளை 12மீ.உயரம் உள்ள 3 குடியிருப்பு, 8,070 சதுர அடி பரப்பளவிற்கு உட்பட்ட வீடுகளுக்கு தரலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Readmore : இனி கட்டட முடிவு சான்று இல்லாமல் இவற்றையெல்லாம் பெறலாம் – தமிழக அரசு புதிய உத்தரவு

2023-02-17 10:41 AM

இன்றைய தங்கம் விலை :

இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.42,000-க்கு விற்பனையாகிறது.

2023-02-17 10:14 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்