Today’s Live : புதுச்சேரியில் 7-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.!
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் வரும் 7-ஆம் தேதி மாசிமக திருவிழா நடைபெறவுள்ளது. இதனையடுத்து,அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டு படி நடைபெறும் என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2023-03-03 04:40
பெண்களுக்கு உரிமைத்தொகை -அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
நாமக்கல்லில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்லத்திருமண விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 மாதத்திற்குள் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளார் என அறிவித்துள்ளார்.
2023-03-03 04:30
அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
இடைத்தேர்தல் வெற்றி என்பது மக்களவை தேர்தல் வெற்றிக்கான தொடக்கம் இது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
2023-03-03 04:00
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்ரமணியசாமி கோயிலில் நியமிக்கட்ட 2 அர்ச்சகர்கள் நியமனத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
2023-03-03 03:30
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு – உச்சநீதிமன்றம் விளக்கம்
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வேண்டும் என ஸ்டெர்லைட் தாக்கல் செய்த வழக்கு திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் விளக்கம் கொடுத்துள்ளது.
2023-03-03 02:55
பிரதமர் மோடியை சந்தித்த கெவின் பீட்டர்சன்
பிரதமர் மோடியை முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் கெவின் பீட்டர்சன் சந்தித்துள்ளார்.
2023-03-03 01:55 PM
தமிழக அரசு வாதம்
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடந்த மேல்முறையீட்டு மனு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, உளவு துறை தகவல் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது மறுப்பது அரசின் உரிமை சார்ந்த விஷயம், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தமிழ்நாடு அரசு வாதம் முன்வைத்துள்ளது.
2023-03-03 01:50 PM
சசிகலா கருத்து
இடைத்தேர்தல் வெற்றி மக்களை ஏமாற்றி, அவர்களை அடைத்துவைத்து, எதிர்கட்சியினரை முடக்கி பெற்ற வெற்றி. அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுவே, மக்கள் விருப்பமும் கூட என ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்த தனது கருத்துக்களை சசிகலா தெரிவித்துள்ளார்.
2023-03-03 01:40 PM
மெஸ்ஸிக்கு வந்த கொலை மிரட்டல்
மெஸ்ஸிக்கு சொந்தமான அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.அவர்கள் மெஸ்ஸிக்கு எழுதிய அந்த செய்தியில், மெஸ்ஸி நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம், ஜாவ்கின் ஒரு நார்கோ, அவர் உங்களைக் கவனித்துக் கொள்ள மாட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
2023-03-03 01:20 PM
தடை விதிக்க முடியாது
குட்கா பொருட்களுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் என கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023-03-03 01:00 PM
எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் முதல்வருடன் சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் முதலமைச்சர் முகஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.
2023-03-03 12:40 PM
கூடுதல் நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு . நீதிபதிகள் சுந்தரம் ஸ்ரீமதி, பாரதி சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்.நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
2023-03-03 12:38 PM
விஜயகாந்த் அறிக்கை
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு நமது கழக நிர்வாகிகள் துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள்.பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து இமாலய வெற்றி பெறுவோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.