Today’s Live : போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு..! ரூ.7.42 கோடி மதிப்புள்ள பிரவுன் சுகர் பறிமுதல்..!
போதை பொருள் கடத்தல் :
அஸ்ஸாம் ரைபிள்ஸின் தெங்னௌபல் பட்டாலியன் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் தெங்னௌபல் மாவட்டத்தில் உள்ள சாமோல் கிராமத்தில் போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டு தோராயமாக ரூ.7.42 கோடி மதிப்புள்ள 3.710 கிலோ போதை பொருள் (பிரவுன் சுகர்) பறிமுதல் செய்யப்பட்டது.
2023-02-19 05:17 PM
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க கூகுளுக்கு கடிதம் :
சத்தீஸ்கரில் அதிகரித்து வரும் சைபர் கிரைம்களைத் தடுக்க கூகுள் இந்தியாவுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம் என்றும் மோசடி செய்யப்படும் போலி கணக்குகளை மதிப்பாய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் பல்ராம்பூர் எஸ்.பி கூறியுள்ளார். போலி எண்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களால் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் இணைக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அவர் மேலும் கூறினார்.
2023-02-19 02:13 PM
காங்கிரஸின் 85-வது பூர்வாங்கக் கூட்டம் :
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸின் 85-வது பூர்வாங்கக் கூட்டம் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த அமர்வு ‘ஹாத் சே ஹாத் ஜோடோ’ என்று அழைக்கப்படும். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த அமர்வு வரவிருக்கும் 2024 தேர்தலுக்கான ஆயத்தமாகும்.
2023-02-19 01:23 PM
சிவஸ்ருஷ்டி தீம் பார்க் திறப்பு விழா :
புனேயில் சிவாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தீம் பார்க்கான சிவஸ்ருஷ்டியின் முதல் கட்ட திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இந்நிகழ்வில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
2023-02-19 12:09 PM
குடியரசுத் தலைவரின் நீலகிரி பயணம் ரத்து :
குன்னூர் ராணுவ மைய நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்கவிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூரில் மேகமூட்டம், சாரல் மழை போன்ற மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
2023-02-19 11:33 AM
மத்திய செயலக மெட்ரோ ரயில் நிலையம் :
சிவில் புனரமைப்பு பணிகளுக்காக மத்திய செயலக மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கேட் எண் 5-ன் நுழைவு வாயில் இன்று மூடப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பயணிகள் கேட் 1 மற்றும் 2 ஐப் பயன்படுத்தி கொள்ளலாம்.
Service Update
Entry/exit from Gate No 5 at Central Secretariat Metro Station will remain closed from 19/02/2023 (Sunday) for civil renovation work.
Passengers can use Gate No 1 & 2 for entry/exit. https://t.co/hMxwZAG4dC
— Delhi Metro Rail Corporation I कृपया मास्क पहनें???? (@OfficialDMRC) February 18, 2023
2023-02-19 10:42 AM