Today’s Live: ஜூன் 5ம் தேதி குடியரசுத் தலைவர் சென்னை வருகிறார் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
குடியரசுத் தலைவர் சென்னை வருகை:
முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் அழைப்பினை ஏற்று சென்னை, கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில், 1000 படுக்கைகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள அதிநவீன பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5ம் தேதி திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
28.04.2023 1:50 AM
பல் பிடுங்கிய விவகாரம்:
பல்வீர் சிங் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவர் அளித்த வாக்கு மூலம், வீடியோ ஆதாரங்கள் சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஒப்படைப்பு.
28.04.2023 10:58 AM
சென்னை விழா 2023:
சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் சர்வதேச கைத்தறி, கைவினை பொருள் மற்றும் உணவுத் திருவிழா இன்று தொடங்குகிறது. மே 14ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவிற்கு, ரூ.10 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
28.04.2023 07:21 AM