தமிழக தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் :
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்லும் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என சிபிஎம் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கரூரில் பேசிய அவர், ‘நல்ல திட்டங்களை பட்ஜெட்டில் கொண்டு வந்திருக்கின்ற மாநில அரசை வரவேற்கிறோம். தொழிற்துறை தொடர்பான நிதியமைச்சரின் கருத்து அவரது சொந்தக் கருத்தா.? அல்லது அரசின் கருத்தா.? என தெரியவில்லை’ என்றார்.
4.04.2023 6:00 PM
திருப்பூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி :
திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழந்திருக்கிறார். வெள்ளக்கோவிலை சேர்ந்த இவரது மனைவியும் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்று காலை கொரோனாவுக்கு தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரும் நேற்று காரைக்காலை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4.04.2023 5:35 PM
வந்தே பாரத் ரயில் :
அதிக கட்டணம் வசூலிக்கும் வந்தே பாரத் ரயில்கள் ஏழை மக்களால் பயன்படுத்திட முடியாது தந்தை பெரியார் திராவிடர் கழகம் (தபெதிக) பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ‘பிரதமர் மோடி தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக கருதும் வந்தே பாரத் ரயில்களின் சேவை செல்வந்தர்கள் பயனடையும் வகையில் இருக்கின்றது. அவற்றை இயக்குவதால் நாடு முன்னேற்றம் அடைந்துவிட்டது என அவர் கூறுவது வேடிக்கையாக உள்ளது’ என்றார்.
4.04.2023 5:00 PM
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு :
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் 90% மக்களுக்கு எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது. முதலமைச்சரின் துரித நடவடிக்கை காரணமாக 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 7000 படுக்கை வசதி அமைக்கப்பட்டது என்றார்.
4.04.2023 4:40 PM
டப்பிங் சங்கம் :
திரைப்பட, தொலைக்காட்சி டப்பிங் சங்கத்திற்கு வைத்த சீல் ஏப்ரல் 17 வரை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சங்க கட்டடத்திற்குள் உள்ள ஆவணங்கள், மேசை உள்ளிட்ட பொருட்களை எடுப்பதற்காக, தமிழ்நாடு திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் டப்பிங் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை தற்காலிகமாக அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.04.2023 3:25 PM
ராகுல் காந்தி ட்வீட்:
ராகுல் காந்தி தனது ட்விட்டரில் ‘அதானியின் போலி நிறுவனங்களில் உள்ள ₹ 20,000 கோடி பினாமி பணம் யாருடையது? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்? 2000 சதுர கி.மீ நிலத்தை அபகரித்ததோடு, அப்பகுதியின் பெயர்களை மாற்றி வரும் சீனாவின் அத்துமீறல் குறித்தும் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்? பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்? என ட்வீட் செய்துள்ளார்.
4.04.2023 2:25 PM
மிளகாய் தீ வைத்து எரிப்பு :
ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் 50 குவிண்டால் சிவப்பு மிளகாயை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்தனர். கருகிய மிளகாய் ரூ.15 லட்சம் மதிப்புடையது என பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
4.04.2023 1:08 PM
கேரள ரயில் தீ விபத்து :
கேரளா ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த ஷாருக் சைபி உத்திரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், புலந்த்சாகர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க – #BREAKING : கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த நபர் கைது..!
4.04.2023 12:25 PM
மாஸ்க் கட்டாயம் :
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தியேட்டர், வணிக வளாகம், கடைகள் உள்ளிட்ட கூட்டம் நிறைந்த இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4.04.2023 12:01 PM
கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு:
தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பார்த்திபன் என்பவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 55, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே, காரைக்காலில் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த செய்தி தூத்துக்குடியில் பீதியை கிளப்பியுள்ளது.
4.04.2023 11:20 AM
நிலக்கரி சுரங்கம் :
புதிய நிலக்கரி சுரங்க திட்டம் குறித்து விவசாயிகள் கவலை அடைய வேண்டாம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால் அனுமதிதரப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : நிலக்கரி எடுக்க டெண்டர் – தமிழக அரசு விளக்கம்
4.04.2023 10:40 AM
பாஜக போஸ்டர் :
பிரதமர் மோடியின் பட்டம் குறித்து கேள்வி எழுப்பி வரும் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக தனது டெல்லி அலுவலகத்திற்கு வெளியே போஸ்டர்களை ஒட்டியுள்ளது.
4.04.2023 10:10 AM
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…