Today’s live : அதிக வெப்பத்தால் 2 வயது குழந்தை உயிரிழப்பு..! தந்தை கைது…

Default Image
அதிக வெப்பத்தால் 2 வயது குழந்தை உயிரிழப்பு:
அமெரிக்காவின் அலபாமா பகுதியில், 8 மணி நேரம் காரில் தனியாக விட்டுச்செல்லப்பட்ட 2 வயது குழந்தை, அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளது.
தற்பொழுது அமெரிக்காவில் வெப்பநிலை 80° செல்ஸியஸ் ஆக இருந்தபோதும், காருக்குள் 123° செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தை உயிரிழந்துள்ளது என குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
2023-03-04 05:41 PM
50,000 பேருக்கு வேலை:

ஆந்திராவில் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து 20 செக்டர்களுக்கு 340 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்படவுள்ளது, இதனால் சுமார் 6 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

mukesh ambani
[Image Source: ritzmagazine]
2023-03-04 04:49 PM
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பஸ் சேவை :

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் பஸ் சேவையை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்து சேவை மாநிலத் தலைநகரை அனைத்து மாவட்டத் தலைமையகங்களுடனும் இணைக்கும். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆதித்யநாத், வரும் நாட்களில் மாநிலத்தில் உள்ள ஒரு லட்சம் வருவாய் கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்கு போக்குவரத்து துறை செயல்பட வேண்டும் என்று கூறினார்.

2023-03-04 04:03 PM

டெல்லி கலால் கொள்கை வழக்கு :

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Manish Sisodia

2023-03-04 03:07 PM

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்புபவர்கள், போலியான வீடியோக்கள் மற்றும் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, மாநிலத்தில் அச்சத்தையும் பீதியையும் பரப்ப முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2023-03-04 02:14 PM

மதுபானக் கொள்கை வழக்கு :

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது 5 நாள் சிபிஐ காவலின் முடிவில் சிபிஐ தலைமையகத்தில் இருந்து ரூஸ் அவென்யூ நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.


2023-03-04 01:33 PM

பாதுகாப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்:

நேற்று சிவாஜி பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் கிரிக்கெட் ஸ்டம்புகளால் எம்என்எஸ் பொதுச் செயலாளர் சந்தீப் தேஷ்பாண்டே மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்பு தாக்குதலுக்குப் பிறகு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு எம்என்எஸ் பொதுச் செயலாளர் சந்தீப் தேஷ்பாண்டே அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

2023-03-04 01:20 PM

ஓராண்டு நிறைவு :

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் மேயர் பிரியா.

Mayor Priya 12
[Image Source : Twitter]

2023-03-04 12:09 PM

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் :

தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படுவதால், பீகார் அரசாங்கத்தின் நான்கு பேர் கொண்ட குழு இன்று தமிழ்நாடு சென்று நிலைமையை ஆய்வு செய்யும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.


2023-03-04 11:25 AM

கல்லறைக்குள் நுழைந்த பேருந்து :
இன்று காலை டெல்லியில் பிருத்விராஜ் சாலையில் கிறிஸ்டியன் கல்லறை வளாக சுவரை உடைத்து டிடிசி பஸ் ஒன்று கல்லறைக்குள் நுழைந்து சுவர் மற்றும் கல்லறைகளை சேதப்படுத்தியுள்ளது.

2023-03-04 10:53 AM

ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு :

வட மாநிலத்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக தகவல் பரவி வரும் நிலையில், வட மாநிலத்தவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம், உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் 200க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார், 3 மணி நேர சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

CHENNAI CENTRAL

2023-03-04 10:42 AM

நடிகர் டாம் சைஸ்மோர் காலமானார்:

சேவிங் பிரைவேட் ரியான் மற்றும் பிளாக் ஹாக் டவுன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான அமெரிக்க நடிகர் டாம் சைஸ்மோர் உடல்நலக்குறைவால் தனது 61 வயதில் காலமானார்.

US actor Tom Sizemore
US actor Tom Sizemore [Image Source : REUTERS]

2023-03-04 10:19 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்