Today’s Live: அடுத்த முதல்வர் யார்..? பதவியேற்பு விழாவிற்காக தயாராகும் கன்டீரவா மைதானம்..!
புதிய முதல்வரின் பதவியேற்பு:
கர்நாடகாவின் புதிய முதல்வரின் பதவியேற்பு விழாவிற்காக ஏற்பாடுகள் பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மைதானத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
17.05.2023 5:30 PM
யார் முதல்வர் :
கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். இன்று மாலை அல்லது நாளைக்குள் முதல்வர் யார்? குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சித் தலைவர் கார்கே வெளியிடுவார். மாநிலத்தில், அடுத்த 3 நாட்களுக்குள் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்துள்ள முக்கியமான 5 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
17.05.2023 4:30 PM
மருத்துவர்களை பாதுகாக்க அவசர சட்டம்:
கேரளாவில் மருத்துவர்களை பாதுகாக்க அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது அம்மாநில அரசு. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
17.05.2023 3:45 PM
கள்ளச்சாராயம் விற்றால் நடவடிக்கை :
கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதோடு கள்ளச்சாராயத்தை தடுக்க வாரந்தோறும் திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
17.05.2023 1:55 PM
ஜேபி நட்டா மும்பை வருகை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு வந்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அவர் இரண்டு நாள் பயணமாக மகாராஷ்டிராவிற்கு வந்துள்ளார்.
#WATCH | Maharashtra: BJP National President JP Nadda receives a warm welcome from party workers in Mumbai. He’s on a two-day visit to the state. pic.twitter.com/o1jlb2hyJB
— ANI (@ANI) May 17, 2023
17.05.2023 1:40 PM
மெட்ரோ டிசிபி உதவி:
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பரவலாகப் பகிரப்பட்ட வீடியோவில், மெட்ரோ ரயில் பெட்டிக்குள் சுயஇன்பத்தில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண டெல்லி மெட்ரோ டிசிபி உதவி கோரியுள்ளார். அவரது படத்தை வெளியிட்டு, “இந்த நபர் டெல்லி மெட்ரோவில் ஆபாசமான செயல்களைச் செய்து கொண்டிருந்தார், அவர் இப்போது தேடப்பட்டு வருகிறார். அவரைப்பற்றி தகவல் தெரிந்தால் 8750871326 அல்லது 1511 (கட்டுப்பாட்டு அறை) அல்லது 112 (போலீஸ் ஹெல்ப்லைன்) இல் தெரிவிக்கவும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
This man was performing obscene act in Delhi metro and he is now wanted in FIR NO.02/23 PS IGIA metro. Please inform SHO IGIA metro on 8750871326 or 1511 (control room) or 112 (police helpline). Identity of the informer will be kept confidential.
Help Delhi Police
Thank You. pic.twitter.com/Idf6TRKd2n— DCP Metro Delhi (@DCP_DelhiMetro) May 16, 2023
17.05.2023 1:15 PM
மக்களின் ஆசைகள் முக்கியம்:
பெரும்பான்மை பலம் கிடைத்தும் காங்கிரஸ் இன்னும் முதல்வர் வேட்பாளரை இறுதி செய்யவில்லை. இது கட்சியில் உள்ள உள் நிலமையை காட்டுகிறது. அரசியலை விட மக்களின் ஆசைகள் முக்கியம். காங்கிரஸ் முதல்வரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என கர்நாடக முதல்வரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.
17.05.2023 12:46 PM
கங்குலிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு:
பிசிசிஐ முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலிக்கு z பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு. ஏற்கனவே, அவருக்கு வழங்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பின் காலம் முடிவடைந்த நிலையில், பாதுகாப்பை உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
17.05.2023 11:55 AM
நாளை இறுதி:
கர்நாடக முதல்வர் தேர்வில் எந்த சர்ச்சையும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். முதல்வர் வேட்பாளர்களை கட்சி மேலிடம் சந்தித்து வருகிறது, அது இன்று அல்லது நாளை இறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முன்னாள் துணை முதல்வருமான டாக்டர் ஜி பரமேஸ்வரா கூறியுள்ளார்.
17.05.2023 11:00 AM
இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17.05.2023 6:10 AM