Today’s Live : மலையாள நடிகர் இன்னசென்ட் காலமானார்..! கேரள முதல்வர் பினராயி விஜயன் இறுதி அஞ்சலி..!

Default Image

இன்னசென்ட் காலமானார் :

மலையாள நடிகரும், முன்னாள் மக்களவை எம்பியுமான இன்னசென்ட்  தனது 75 வது வயதில் நேற்று இரவு காலமானர். அவரது உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.


27.03.2023 5.15 PM

மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் ஆலோசனை :

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று இரவு ஒரு கூட்டத்திற்கு ஒத்த கருத்துள்ள கட்சிகளின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

27.03.2023 4.10 PM

7 வயது சிறுமி கொலை :

கொல்கத்தாவில் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மற்றும் நிர்வாகத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.


27.03.2023 4.10 PM

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு ஒத்திவைப்பு :

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

27.03.2023 3.40 PM

எடியூரப்பா வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல் :

பஞ்சாரா மற்றும் போவி சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின் போது முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் அலுவலகம் மற்றும் வீடு மீது கற்கள் வீசப்பட்டன. முன்னாள் நீதியரசர் சதாசிவ கமிஷன் அறிக்கையை அமல்படுத்தக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

Readmore – எடியூரப்பா வீட்டின் மீது கற்கள் வீசி தாக்குதல்.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

27.03.2023 3.30 PM

டெல்லியில் ஆர்ப்பாட்டம் :

ராகுல் காந்தியை எம்.பி.யாக தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து இந்திய இளைஞர் காங்கிரஸ் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

27.03.2023 2.10 PM

தீ விபத்து :

மகாராஷ்டிராவின் அந்தேரியில் சாகி நாகா மெட்ரோ ரயில் நிலையம் அருகே எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளன.

27.03.2023 1.40 PM

குடியரசுத் தலைவர் கொல்கத்தா வருகை : 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக கொல்கத்தா வந்துள்ளார். அவரை மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மற்றும் அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் வரவேற்றனர்.

27.03.2023 01.00 PM

மணல் திருட்டு :

அலிபூர் பகுதியில் உள்ள யமுனை நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதைக் கண்காணிக்கவும் தடுக்கவும் உ.பி காவல்துறையுடன் கூட்டுப் பணிக்குழுவை அமைக்குமாறு டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வு குறித்தும் உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றமும் நிலை அறிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

27.03.2023 12.10 PM

இரு அவைகளும் ஒத்திவைப்பு :

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணைக்கான எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மற்றும் அதானி குழும விவகாரம் மற்றும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து கோஷம் எழுப்பினர். நாடாளுமன்ற இரு அவைகளும் தொடங்கிய சில நிமிடங்களில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் இன்று ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

27.03.2023 11.13 AM

உள்ளிருப்பு போராட்டம் :

காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இன்றிரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

27.03.2023 10.45 AM

மல்லிகார்ஜுன கார்கே பேச்சு: 

உண்மை வெளிவர வேண்டும் என்று விரும்புகிறோம். இரண்டரை வருடங்களில் அதானியின் சொத்துக்கள் அதிகரித்திருக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? அவரிடம் அந்த மந்திரம் இருந்தால், அதையே குடிமக்களுக்கும் சொல்ல விரும்புகிறோம்… ஜேபிசி அமைத்தால், அந்த மேஜிக் பற்றி தெரிந்து கொள்வோம், மக்களுக்கும் தெரிய வரும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

27.03.2023 10.09 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்