Today’s Live: பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றடைந்தார்..!

LIVE NEWS

இரண்டாவது கட்ட பயணம்:

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு தனது மூன்று நாடுகளுக்கான பயணத்தின் இரண்டாவது கட்டமாக பப்புவா நியூ கினியா சென்றடைந்தார். அவரை பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார்.

21.05.2023 5:40 PM

மோடி சமாஜ் தேசிய மாநாடு:

குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற மோடி சமாஜ் தேசிய மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “காங்கிரஸ் எப்போதுமே ஓபிசி சமூகத்தை புறக்கணித்துள்ளது. அவர்களுக்காக பாடுபடுவது பாஜக தான். காங்கிரஸ் நாட்டை 56 ஆண்டுகள் ஆட்சி செய்தது, ஆனால் அவர்களை (ஓபிசி சமூகம்) வளர்க்கவில்லை, ஆனால் பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் அவர்களுக்காக உழைத்தார். ஏழ்மையான குடும்பம் அதனால் அவர் ஏழைகளின் வலியை புரிந்துகொள்கிறார்” என்று கூறியுள்ளார்.

21.05.2023 4:35 PM

அதிகாரிகள் மாற்றம்:

டெல்லியில் உள்ள அதிகாரிகளை மாற்றுவது தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மே 24ம் தேதி உத்தவ் தாக்கரேவையும், 25ம் தேதி என்சிபி தலைவர் சரத் பவாரையும் மும்பையில் சந்திக்க உள்ளார்.

21.05.2023 4:10 PM

புதிய பேருந்துகள் தொடக்கம்:

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடாவில் குஜராத் மாநில பிராந்திய போக்குவரத்து கழகத்தின் (ஜிஎஸ்ஆர்டிசி) புதிய பேருந்துகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

21.05.2023 1:50 PM

ராகுல் காந்தி ட்வீட் :

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது எனவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

21.05.2023 12:45 PM

கலந்தாய்வு ஒத்திவைப்பு:

தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒத்திவைப்புக்கான காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

21.05.2023 11:50 AM

போதைப்பொருள் கடத்தல் வழக்கு:

என்சிபி மும்பையின் முன்னாள் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே, ஆர்யன் கானின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் விசாரணைக்காக மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வந்தார்.

21.05.2023 11:28 AM

ஆளுநரை சந்தித்த அண்ணாமலை:

மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதல்வருக்கு அறிவுறுத்த வேண்டும் என ஆளுநரிடம் தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் குழுவொன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

21.05.2023 10:45 AM

ராஜீவ் காந்தி நினைவு நாள்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீரபூமியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

21.05.2023 10:15 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்