Today’s Live: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது:
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. வரும் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உள்ளிட்ட திட்டங்கள், புதிய அறிவிப்புகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்துகிறது.
Readmore : தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
2023-03-09 05:35 PM
டெல்லி அமைச்சர்களாக பதவியேற்பு :
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் டெல்லி கேபினட் அமைச்சர்களாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) விகே சக்சேனா ஆகியோர் முன்னிலையில் பதவியேற்றனர்.
Readmore : டெல்லி அமைச்சர்களாக அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் பதவியேற்றனர்!
2023-03-09 05:00 PM
குருப் 4 தேர்வு :
கடந்தாண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
2023-03-09 03:35 PM
பாஜக தொண்டர்கள் போராட்டம் :
பஞ்சாப் மாநில பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காக சண்டிகரில் மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்களை கலைக்க போலீசார் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்துகின்றனர்.
#WATCH | Punjab BJP workers & leaders protest against the state Government in Chandigarh over various issues. Police use water cannons to disperse them. pic.twitter.com/YOgoNAlpwg
— ANI (@ANI) March 9, 2023
2023-03-09 02:00 PM
ஓபிஎஸ் வேட்பாளர் அணியில் இருந்து நீக்கம்:
ஓபிஎஸ் அணியில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளகட்சி ராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை தனது அணியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
2023-03-09 12:35 PM
ஜனாதிபதி அமிர்தசரஸ் வருகை :
ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒரு நாள் பயணமாக அமிர்தசரஸ் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் பகவந்த் மான் வரவேற்றனர்.
Punjab | President Droupadi Murmu arrives in Amritsar on a one-day visit to the state. Governor Banwarilal Purohit and CM Bhagwant Mann receive her at the airport. pic.twitter.com/B3MMcy84X5
— ANI (@ANI) March 9, 2023
2023-03-09 12:20 PM
அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி :
திராவிட கட்சிகளை தாண்டி தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் வளராது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். அண்ணாமலைக்கு வாய் அடக்கம் தேவை என்றும் பாஜகவினரை இழுத்து அதிமுக வளர வேண்டிய அவசியமில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மேலும் கூறினார்.
2023-03-09 11:40 AM
24மணி நேரமும் மின்சாரம் :
விவசாயப் பெருங்குடி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் முறை வைத்துதான் மின்சாரம் பிரித்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. செயற்கையான ஒரு மின்தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறதோ என விவசாயிகள் எண்ணுகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Readmore : விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குக – இபிஎஸ்