கலால் கொள்கை வழக்கு :
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை மார்ச் 17 வரை அமலாக்க இயக்குநரகம் காவலில் வைக்க ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லியில் பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய மேடையின் (NPDRR) 3வது அமர்வில் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.
சீனாவில் வரலாற்றில் சிறப்புமிக்க நிகழ்வாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்றுள்ளார்.
Readmore : வரலாற்றில் இதுவே முதல் முறை.! புதிய சீன அதிபருக்கு கிடைத்த மிக பெரிய பெருமை.!
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
Readmore : விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி கடனுதவி – அமைச்சர் பெரிய கருப்பன்
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு :
தமிழ்நாட்டில் 40 ஆண்டு காலம் எந்த கட்சிகளும் கொண்டு வராத ரயில்வே திட்டங்களை கடந்த 9 ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் தமிழ் மக்களின் பெருமையை கொண்டு சேர்ப்பதற்காகப் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
தமிழ் மொழிக்கு மரியாதை கொடுத்திருப்பதால்தான், தமிழ்நாட்டுக்கு பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் செலுத்தும் விதமாக திருவள்ளுவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
அமிர்தசரஸ் செக்டார், பிஓபி ரஜடல் 144 பிஎன் ஏஓஆர் பகுதியில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற ஒரு ஊடுருவல்காரரை பி.எஸ்.எஃப் அதிகாரிகள் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் 5-ம் தேதி, கொச்சியில் உள்ள பிரம்மபுரம் கழிவு மேலாண்மை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு நிலைமையை ஆய்வு செய்ய கேரள அமைச்சர் பி.ராஜீவ் பார்வையிட்டார்.
பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் தேர்தல் பிரசாரக் குழுவையும், 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கர்நாடக பாஜகவின் ஷோபா கரந்த்லாஜே தலைமையிலான தேர்தல் நிர்வாகக் குழுவையும் அமைத்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர்கள் சௌரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோர் டெல்லி செயலகத்தில் அந்தந்த துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகருக்கு தெற்கே 101 கிமீ தொலைவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.
மத்திய அரசு பிஎஸ்எப்க்குள் (BSF) உள்ள காலியிடங்களில் முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை அறிவித்தது. அத்துடன் அவர்கள் முதல் தொகுதி அல்லது அடுத்தடுத்த தொகுதிகளில் உள்ளவரா என்பதைப் பொறுத்து உயர் வயது வரம்பு விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. MHA மார்ச் 6 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…