இன்று ‘முத்தலாக்’ சட்ட மசோதா மீதான விவாதம்….பா.ஜனதா எம்.பி.க்கள் கண்டிப்பாக பங்கேற்க கொறடா உத்தரவு…!!
நாளை மக்களவையில் ‘முத்தலாக்’ மசோதா மீது விவாதம் நடத்தப்படும் என்பதால் பா.ஜனதா எம்.பி.க்கள் தவறாமல் ஆஜராக வேண்டுமென்று கொறடா உத்தரவிட்டுள்ளார்.
முஸ்லிம் பெண்களின் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி ‘முத்தலாக்’ முறையில் மனைவியை விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும் முத்தலாக் முறையில் மனைவியை விவாகரத்து செய்யும் கணவருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் புதிய சட்டமசோதா மாநிலங்களவையில் சில கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் நிலுவையில் இருந்த முத்தலாக் சட்ட மசோதா நாளை கூடுகிற மக்களவையில் விவாதத்துக்கு வருகின்றது.நாளைய மக்களவையில் இந்த முத்தலாக் சட்ட மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதால் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் சபைக்கு வருவதற்கு பாஜக கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.