கர்நாடக மாநில அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வரும் 29 வயதுடைய மது என்பவர், தனது பணி நேரம் போக தினமும் 5 மணி நேரம் போட்டித்தேர்வுக்காக படித்து வந்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான யூபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல்நிலை தேர்வில் வெற்றிப்பெற்றார். பின்னர் முதன்மை தேர்விலும் மது வெற்றிப் பெற்றுள்ளார். வருகின்ற மார்ச் மாதம் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதில் தேர்ச்சிப் பெற்றால், நடத்துநர் பணியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக மாறிவிடுவார். மது தனது குடும்பத்தில் முதல்முறையாக பள்ளிக்கு சென்ற நபர் என கூறப்படுகிறது. இவர் 19 வயதில் நடத்துநர் பணியில் சேர்ந்து இளநிலை, முதுநிலை படிப்புகளை தொலைத்தூர கல்வி மூலம் பயின்றுள்ளார்.
இந்நிலையில், இதற்கு முன் 2018-ல் தேர்வெழுதிய மது தோல்வி அடைந்தார். இரண்டாவது முயற்சியாக தற்போது முதன்மை தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார். இவர் எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமலே தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூப் வீடியோக்கள் மூலம் நிறைய கற்றுக்கொண்டதாக மது தெரிவிக்கிறார். பின்னர் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஷிகா ஐஏஎஸ், மதுவுக்கு ஊக்கம் அளித்துள்ளார். ஐஏஎஸ் நேர்காணலுக்கு தயாராவதற்கு வழிகாட்டலையும் ஷிகா வழங்கி வருவதாக பெங்களுரு மிர்ரர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…