டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்
Readmore : #Breaking : குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும்.! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.!
ஏர் இந்தியா நிறுவனம் 250 ஏர்பஸ் விமானங்களை பெரும் விமான ஒப்பந்தத்தில் வாங்க உள்ளது. அதில் 210 சிங்கில் ஐஸில் A320 நியோஸ் ரக விமானங்கள் (single-aisle A320neo)மற்றும் 40 வைட்பாடி A350 ரக விமானங்கள் (widebody A350s), பட்டியலில் அடங்கும். இவற்றின் விலை $50 பில்லியனுக்கும் (5000 கோடி) அதிகமாக இருக்கும்.
துருக்கியில் ஏற்பட்ட தொடர் தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு பிறகு காஜியான்டெப் பகுதியில் உள்ள ரோமானியப் பேரரசின் 2,000 ஆண்டுகள் பழமையான காசியான்டெப் கோட்டை சேதமடைந்துள்ளது.
ஹரியானாவில் கூட்டுறவு ஏற்றுமதி இல்லம் மற்றும் கூட்டுறவு துறையின் பல்வேறு திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். கர்னாலில் உள்ள ஹரியானா மாநில கூட்டுறவு வழங்கல் மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (HAFED) கண்காட்சியையும் பல்வேறு விற்பனை நிலையங்களையும் அமித்ஷா பார்வையிடுகிறார்.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசியின் அலுவலகங்களில் வருமான வரித் துறை ஆய்வு நடத்தியது. வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று முழுமையாக ஒத்துழைப்பதாக பிபிசி கூறுகிறது. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்த தடை மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2023-02-14 03:32 PM
சென்னை தலைமை செயலகத்தில் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகள் புரிந்துகொள்வதற்கு வசதியாக, பிரெய்லி எழுத்துக்களில் வரைபடம் மற்றும் தகவல்பலகை அமைக்கப்பட்டுள்ளது.
2023-02-14 02:12 PM
வாரணாசிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வாரணாசி விமான நிலையம் மறுத்துள்ளது. ராகுல் காந்தி பயணம் செய்யவிருந்த சார்ட்டர் ஜெட் விமான நிறுவனமே விமானத்தை ரத்து செய்துவிட்டதாக விமான நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
2023-02-14 02:02 PM
டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Readmore : #BREAKING: பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!
2023-02-14 12:42 PM
ஷாஜகானின் 368-வது நினைவு நாளையொட்டி, பிப்ரவரி 17 முதல் 19 வரை தாஜ்மஹாலுக்குள் செல்ல அனைவருக்கும் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களும் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore : இந்த 3 நாட்கள் தாஜ்மஹாலுக்கு செல்ல அனுமதி இலவசம்..!
2023-02-14 12:20 PM
திமுக ஆட்சியை கலைத்த காங்கிரசுடன் கூட்டணி வைக்கலாமா என பிரதமர் கூறியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜகவின் ஆட்சியை கலைத்த அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பிரதமர் மோடி கூட்டணி பற்றி கேட்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2023-02-14 11:29 AM
சென்னை ஐஐடியில் 2ம் ஆண்டு முதுநிலை ஆராய்ச்சி படித்து வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்ற எனும் மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் உள்ளன. சன்னியுடன் சேர்ந்த மற்றொரு மாணவரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Readmore : சென்னை ஐஐடியில் ஒரு மாணவன் தற்கொலை.. இன்னோரு மாணவன் தற்கொலை முயற்சி.? போலீஸ் தீவிர விசாரணை.!
2023-02-14 11:19 AM
கர்நாடகாவில் பாஜக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கடந்த 2 மாதங்களில் நான் 5 முறை அந்த மாநிலத்திற்கு வந்துள்ளேன். அம்மாநில மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அங்கு பிரதமர் மோடியின் புகழைப் பார்த்தேன். கர்நாடகாவில் மாபெரும் ஆணை, மாண்டியா மக்களும் தற்போது பரம்பரை கட்சிகளில் இருந்து மாறி பாஜகவின் வளர்ச்சி அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளனர்.இது கர்நாடகாவுக்கு நல்ல அறிகுறி என்று மாநில தேர்தல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…