பாஜக ஆட்சி தப்புமா?! மீட்டு வருவாரா குமாரசாமி?! மீண்டும் கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு!
கடந்த 23 ம் தேதி கர்நாடக சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 வாக்குகள் மட்டுமே பெற்று முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு தோல்வியுற்றது. இதனால், ஆட்சியை பறிபோகி முதல்வர் பதவியில் இருந்து குமாரசாமி பதவி விலகினார். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் 105 வாக்குகள்பெற்று வெற்றி பெற்று எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதனையடுத்து எடியூரப்பா கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார்.
இதன் பின்னர் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா வருகின்ற 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அன்றைய தினமே நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.இதனையடுத்து இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறார் எடியூரப்பா.
ஆனால் ராஜினாமா செய்த 17 பேரை கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் 2023 மே 15 வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சபாநாயகர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.