நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்க உள்ள நிலையில் இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகள் மும்பரமாக க ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பல மாநிலங்களில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
பிரதமர் மோடி அந்த மாத இறுதியில் 28-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமையுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வருகிறார். நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, திறந்து வைத்தும் இருந்தார்.
விவசாயி உயிரிழப்பு.. இரண்டு நாட்களுக்கு பேரணி ஒத்திவைப்பு..!
இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தனது சொந்த மாநில குஜராத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இங்கு பல்வேறு துறைகளில் மொத்தம் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். இன்று காலை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அமுல் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இங்கிருந்து மதியம் மெஹ்சானா சென்று வாலிநாத் மகாதேவ் கோயிலில் பிரார்த்தனை மேற்கொள்கிறார். பின்னர் மெஹ்சானாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு 8,350 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து, மாலையில் நவ்சாரியில் ரூ.17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடக்கி வைக்கிறார்.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…