இன்றே கடைசி நாள்… வருமானவரி கணக்கு தாக்கல் செய்துவிடீர்களா.?
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று (ஜூலை 31) கடைசி நாள்
2022 ஏப்ரல் 1 முதல் 2023 மார்ச் 31 வரையிலான வருமான வரி கணக்குகளை வருமான வரி செலுத்துவோர் இன்று ஜூலை 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றே கடைசி நாள் என்பதால் வருமான வரி கணக்கு தாக்கல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022-2023 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை 6 கோடியை தாண்டி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதில் இதுவரை 88 சதவீதம் அதாவது 4.46 கோடி கணக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்று கடைசி நாள் என்பதால் வருமான வரித்துறையினருக்கு ஏற்படும் பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்க்கும் வகையில் வருமானவரித்துறையினர் உதவி மையத்தை கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட நடத்தினர். இன்றும் செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.