உலக சமஸ்கிருத தின வாழ்த்துக்கள்.! வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி…

World Sanskrit day - PM Modi Wishes

டெல்லி : இன்று உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுகிறது. பண்டைய கால நூல்கள் பற்றிய ஆராய்ச்சிகள், இந்து மத வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கொண்டு சமஸ்கிருத மொழி போற்றி பாதுகாக்கப்படுகிறது.

இன்று உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதில், “உலக சமஸ்கிருத தின வாழ்த்துக்கள். சமஸ்கிருதத்தின் மீது மிகுந்த பற்று கொண்டு, இந்த மகத்தான மொழியை வளர்க்க முயற்சிப்பவர்களை நான் மனதார வாழ்த்துகிறேன்.” எனப் பதிவிட்டு வீடியோ ஒன்றையும் அதில் இணைத்துள்ளார் .

சமஸ்கிருத தினம் போல, ஆண்டுதோறும் செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும், இந்தி மொழி தினம் மற்றும், ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாடப்படும் தெலுங்கு தினம் ஆகியவற்றிற்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை ஆண்டுதோறும் தெரிவித்து வருகிறார்.

இன்று கொண்டாடப்படும் சமஸ்கிருத மொழியானது, CBSC மற்றும் ICSE பாடப்பிரிவின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு விருப்ப மொழியாக இம்மொழி உள்ளது. இம்மொழிக்கென தனி பட்டப்படிப்பு பாடப்பிரிவுகளைக் கொண்டு டெல்லி, லக்னோ, மேற்கு வங்கம், உத்தரகண்ட், வாரணாசி,ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதே போல அமெரிக்கா, ஐரோப்பியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் செயல்படும் குறிப்பிட்ட பல்கலைக்களங்களிலும் சமஸ்கிருத பட்டப்படிப்பு பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்