நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்…!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும், இன்று தான் விண்ணப்பிக்க கடைசி நாள்.
ஒவ்வொரு வருடமும் மே மாதங்களில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் காரணமாக கடந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு தாமதமாக நடத்தப்பட்டது போலவே, இந்த ஆண்டும் சற்று தாமதமாக நீட் தேர்வு நடைபெற உள்ளது.
அதன்படி வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்க உள்ளது. இதுவரை 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிப்பதிவு https://ntaneet.nic.in/ எனும் இணையதளத்தில் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விண்ணப்பப்பதிவு ஏற்கனவே கடந்த 6-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், கால அவகாசம் நீடிக்கப்பட்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பப்பதிவு செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தான் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள். நீட் தேர்வு எழுத விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.