சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்ட் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள், தகுதியும் ஆர்வமுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிபிஆர்எஃப் உதவி கமாண்டன்ட் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு செயல் முறையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடந்த ஜூன் 23ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் சிபிஆர்எஃப் விண்ணப்பிக்கும் செயல்முறை மூடப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் crpf.gov.in எனும் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த சிபிஆர்எஃப் பணிக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையில் உடல் தர சோதனை, எழுத்துத்தேர்வு, விரிவான மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும்.
மேலும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான் இந்தப் பணியிடங்களுக்கான தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கிய ஆப்லைன் விண்ணப்பிக்கும் செயல்முறை ஜூலை 29 இன்றுடன் முடிவடைகிறது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் இணைத்து, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 மற்றும் முத்திரைகளுடன் 2 உறைகளை விண்ணப்பதாரரின் முறையான முகவரியுடன் டிஐஜி, குழு மையம், சிஆர்பிஎஃப், ராம்பூர், மாவட்டத்திற்கு அனுப்ப வேண்டும்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…