கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஓர் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
பொதுமக்கள் கையிறுப்பில் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும். அதனை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
20000 ரூபாய் வரையில் வங்கியில் கொடுத்து, வங்கி விதிப்படி அடையாள விவரங்களை தெரிவித்து பணமாக பெற்று கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் இருந்தால் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, பெட்ரோல் பங்குகள், போக்குவரத்து கழகம் என பல்வேறு நுகர்வோர் துறைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வெளியாகின. அறநிலையத்துறையினர், அனைத்து கோவில் உண்டியல் காணிக்கையும் எண்ணப்பட்டு 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் கால அவகாசம் செப்.30 ஆம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிசர்வ் வங்கி கால அவகாசத்தை நீட்டித்து அறிவித்தது. அதன்படி, அக்.7 ஆம் தேதி வரை ரூ.2000 தாள்களை மாற்றலாம் என உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்றுடன் இதற்கான கால அவகாசம் நிறைவடைகிறது.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…