ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை… ஹரியானாவில் இன்று கடைசி நாள்.! நாளை தலைநகரில்….
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்று மாலை ஹரியானா மாநிலத்தில் நிறைவு பெற்று நாளை தலைநகர் டெல்லியில் தொடங்க உள்ளது.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் செல்லும் தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். 100 நாட்களை கடந்து இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.
கடந்த புதன்கிழமை அன்று ராஜஸ்தானில் இருந்து ஹரியானா சென்ற ராகுல் காந்தி இன்று ஹரியானாவில் உள்ள சோஹ்னா, கெர்லி லாலாவிலில் தனது யாத்திரையை தொடங்கினார்.
ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் இந்த ஒற்றுமையாத்திரையில் கலந்து கொண்டனர். இன்று ஹரியானாவில் முடியும் யாத்திரை, நாளை தலைநகர் டெல்லியில் தொடங்க உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரசார் தயாராகி வருகின்றனர்.