சத்தீஸ்கரில் இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா – பிரதமர் மோடி ட்வீட்
இன்று சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சத்தீஸ்கரில் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது காலை 8 மணிக்கு மேலும் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சதீஷ்கரில் இன்று முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளன. சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள இடங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் இடங்களில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகள் கண்காணிக்கப்படுகின்றன.
#Breaking : மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது..!
அதேபோல், மிசோரம் மாநிலத்தில் 40 சட்டப்பேரவை தொகுதிகளில் 1276 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சத்தீஸ்கரில் இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா. முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து இவ்விழாவில் பங்குபெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில், முதல்முறையாக வாக்களித்த அனைத்து மாநில இளம் நண்பர்களுக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார்.