இளைஞர்களின் எழுச்சி நாயகனின் 89-வது பிறந்தநாள் தினம் இன்று.!

Default Image

இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 89-ஆவது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

ராமேஸ்வரத்தை பூர்விகமாக கொண்ட டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை படைத்தார். அக்னி ஏவுகனை சோதனைக்குப் பின் உலகம் முழுவதும் கலாமின் புகழ் பரவ தொடங்கியது.

காலம் அவர்களின் சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகள் அவரை தேடி வந்தன. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து 2002-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி நாட்டின் 11-வது ஜனாதிபதியாக அப்துல் கலாம் பதவியேற்றார்.

இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று போற்றப்படும் இவர், தமது பதவிக்காலத்திலும் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு, ஜூலை 27-ஆம் நாள் அவரின் உயிர் பிரிந்தது. கலாமின் மறைவிற்கு சாதி, மத, இன, பேதமின்றி இந்தியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, 2011-ஆம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தநாளை  உலக மாணவர்கள் தினமாக கொண்டாட ஐ.நா அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என கலாமின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்