இன்று தமிழ்நாடு தினம்.! வாழ்த்து தெரிவித்த வெங்கையா நாயுடு.!

Default Image

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு தினத்தையொட்டி பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் துணைத் தலைவரான வெங்கையா நாயுடு தனது வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, மாநில தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

செழிப்பான கலாச்சார வரலாறு, கண்கவர் கட்டிடக்கலை, அழகுமிளிர் கடற்கரை மற்றும் பலதரப்பட்ட நில அமைப்புக்களுக்கு தமிழ்நாடு பெயர் பெற்றது.வரும் காலங்களில் இந்த மாநிலம் பல்வேறு வளங்களைப் பெற்று உயரிய நிலையை அடையட்டும்‌ என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்