இந்தியாவின் முதல் மத்திய கல்வி மந்திரியான மவுலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்டு தோறும் நவம்பர் 11-ஆம் தேதியான இன்று தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், இந்தியாவின் முதல் மத்திய கல்வி மந்திரியுமான மவுலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் இந்த தேசிய கல்வி தினத்தில் தேசத்தை கட்டியெழுப்பிய ஆசாத்தின் பங்கெளிப்புகளை நினைவு கூர்கிறது .
மவுலானா அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்கவும் , நவீன கல்வி முறை உருவாக்கவும் போராடிய இவர் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு அமைக்கவும் பாடுபட்டார். மேலும் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனமான காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனம் நிறுவியரும், AICTE மற்றும் UGC போன்ற உயர்கல்வி அமைப்புகள் அமைக்கவும் பாடுப்பட்டவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத். மேலும் இவர் ஒருமுறை பள்ளிகள் நாட்டின் எதிர்கால குடிமக்களை உருவாக்கும் ஆய்வகங்கள் என்று கூறியிருந்தார். மேலும் 1992-ல் இவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…