இன்று தேசிய கல்வி தினம் .!

Default Image

இந்தியாவின் முதல் மத்திய கல்வி மந்திரியான மவுலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஆண்டு தோறும் நவம்பர் 11-ஆம் தேதியான இன்று தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும்,  இந்தியாவின் முதல் மத்திய கல்வி மந்திரியுமான மவுலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் இந்த தேசிய கல்வி தினத்தில் தேசத்தை கட்டியெழுப்பிய  ஆசாத்தின் பங்கெளிப்புகளை நினைவு கூர்கிறது .

மவுலானா அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்கவும் , நவீன கல்வி முறை உருவாக்கவும் போராடிய இவர் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு அமைக்கவும் பாடுபட்டார். மேலும் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனமான காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனம் நிறுவியரும், AICTE மற்றும் UGC போன்ற உயர்கல்வி அமைப்புகள் அமைக்கவும் பாடுப்பட்டவர் மவுலானா அபுல் கலாம் ஆசாத். மேலும் இவர் ஒருமுறை பள்ளிகள் நாட்டின் எதிர்கால குடிமக்களை உருவாக்கும் ஆய்வகங்கள் என்று கூறியிருந்தார். மேலும் 1992-ல் இவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்