இன்றுதான் தீபாவளி… ஜன.22-ஐ யாரும் மறக்கமாட்டார்கள் – அயோத்தியில் பிரதமர் மோடி உரை

pm modi

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இவ்விழாவில் பங்கேற்று பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். இதன்பின், முதலாவது பூஜையாக தேங்காய் மற்றும் பழங்கள் வைத்து தீபராதனை காட்டி ஸ்ரீ ராம பகவானை பிரதமர் மோடி வழிபட்டார்.

பிரதமரை தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் ராமரை வழிபட்டனர். இதன்பின் குழந்தை ராமருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 500 ஆண்டுகள் கனவு நிறைவேறியுள்ளது என ராம பக்தர்கள் மகிச்சியில் உள்ளனர்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பைத் தொடர்ந்து, குவிந்திருந்த பக்தர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் பேசியதாவது, பல ஆண்டு காத்திருப்புக்கு பின்னர் ராமர் வந்துவிட்டார். ராமர் இந்தியாவின் நம்பிக்கை, அடித்தளம், மாண்பு, பெருமை, ராமரே தலைவர், ராமரே கொள்கை, ராமரே நித்தியமானவர்.

வரலாற்று நிகழ்வு.! திறக்கப்பட்ட ராமர் சிலை.! பிரதமர் மோடி உள்ளிட்டோர் சாமி தரிசனம்.!

ராமரின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த தேசமும் ராமர் கோயில் திறக்கப்பட்டதை தீபாவளி போன்று இன்று கொண்டாடப்படுகிறது. சட்டப்படியே ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு நான்றி. ராமர் இனி கொட்டகையில் இருக்க மாட்டார் கோயில் கருவறையினுள் இருப்பார்.

சில நூறு ஆண்டுகால தியாகத்திற்கு பலன் கிடைத்துள்ளது. ராமர் கோயில் திறக்கப்பட்ட இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜன.22ம் தேதியை யாரும் மறக்கமாட்டார்கள். அடிமைத்தனத்தின் அடையாளம் நீங்கியுள்ளது. தாமதாக கோயில் கட்டியதற்காக ராமர் நம்மை மன்னிப்பார் என நம்புகிறேன். ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்தார்.

ராமர் வருகைக்காக அயோத்தி பல காலமாக காத்திருந்தது. தற்போது பல நூற்றாண்டுகளுக்கு பின் ராமர் மீண்டும் திரும்பி வந்துள்ளார். ராமர் போற்றப்படும்போது அதன் பலன்கள் நூற்றாண்டுகளுக்கு மட்டும் நீடிக்காது, அதன் விளைவு பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் என ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் சென்றதை குறிப்பிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்