இன்று தனித்துவமான தமிழ் புத்தாண்டு..! உருவான வரலாறு மற்றும் பாரம்பரியம் இதோ..!

Published by
செந்தில்குமார்

உலகெங்கும் வாழும் அனைவரும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர் நாட்காட்டியில் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

வரலாறு : 

தமிழர்கள் பூமி, சூரியனை  அடிப்படையாக வைத்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். ஒரு வருடத்தில் மொத்தமாக 12 மாதங்கள் உள்ளன. ஆனால், சித்திரை மாதமே ஆண்டின் முதல் மாதமாக உள்ளது. அறிவியல் ரீதியாக பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதன் மூலமாகவே தமிழ் வருடத்தின் கால அளவு பின்பற்றப்படுகிறது.

மேலும், சூரியன் மேச இராசியில் பிரவேசிப்பதை ஆண்டின் தொடக்கமாகவும், மீன இராசியிலிருந்து வெளியேறுவது ஆண்டின் முடிவு என்றும் கணக்கிடப்படுகிறது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள் மற்றும் நேரம் கணிக்கப்படுகிறது.

சான்றுகள் :

முன்பெல்லாம் தமிழர்கள், புத்தாண்டைக் கொண்டாடினார்கள் என்பதற்கான சான்றுகள் சரிவர கிடைக்கவில்லை. ஆனால், ஆவணி மாதத்தை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டாடியிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதன்படி, தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரும் ஆவணியே தமிழ் வருடத்தின் முதல் மாதம் என்கின்றார்.

இருந்தாலும், தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை வைத்து கணித்து பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரண்டு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பதால் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சங்க இலக்கியமான நெடுநல்வாடை மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி போன்ற நூல்கள் சித்திரை மாதம் தான் முதல் மாதம் என்று கூறுகின்றன.

பாரம்பரியம் :

புத்தாண்டுக்கு முந்தைய நாளில் தமிழர்கள் வீடு வாசலை சுத்தம் செய்து, வீட்டை அலங்கரிப்பர். பிறகு, மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தாம்பூலத்தை சாமி அறையில் வைத்து, அதை புத்தாண்டு அன்று அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. மேலும், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் வாழும் தமிழ் மக்களும் இந்த புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“ராமதாஸுக்கு வேற வேலை இல்லை., பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!” மு.க.ஸ்டாலின் காட்டம்!

“ராமதாஸுக்கு வேற வேலை இல்லை., பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!” மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…

2 minutes ago

AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!

பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…

44 minutes ago

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…

53 minutes ago

1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…

1 hour ago

“பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்” தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்த விஜய்!

சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…

1 hour ago

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்த ஹிஸ்புல்லா! 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…

2 hours ago