கனமழை: புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.!
புதுச்சேரி மாநில ஆளுகைக்கு உட்பட்ட கேரளாவில் உள்ள பிராந்தியமான மாஹே பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் கனமழை பெய்யும் என 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.