பரபரப்பு…நேற்று 10 மணி நேரம் விசாரணை- இன்று காங்.எம்பி ராகுல் காந்தி மீண்டும் ஆஜர் – அமலாக்கத்துறை உத்தரவு!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று ஆஜரானார்.அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜரான நிலையில்,அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
#WATCH Congress leader Rahul Gandhi surrounded by hundreds of party workers marches to the Enforcement Directorate office to appear before the agency in the National Herald case pic.twitter.com/EN1sjuOqfx
— ANI (@ANI) June 13, 2022
குறிப்பாக,காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.இதனால்,டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனினும்,பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்,டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகிய ராகுல் காந்தியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,நேற்று இரவு 11 மணிக்கு பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி,நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி மீண்டும் ஆஜராக உள்ளார்.நேற்றைப்போல் இன்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதனால்,டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முதல் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ED அலுவலகம் வரை RAF உட்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பெரிய அளவில் நிறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
Barricading underway & security forces deployed near Akbar Road in Delhi with Section 144 in CrPC imposed in the area. pic.twitter.com/56XKAMR2Xg
— ANI (@ANI) June 14, 2022