இந்தியாவில் சிக்கிய 315 மாணவர்கள் மற்றும் 100 பாகிஸ்தானியர்கள் வாகா வழியாக சென்றனர்..!

கொரோனா வைரஸ் காரணமாக அதை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 315 மாணவர்கள் மற்றும் 100 பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் சிக்கி கொண்டனர்.இவர்கள் அனைவரும் இன்று அட்டாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றனர்.
“மருத்துவ நோக்கங்களுக்காக வந்து ஊரடங்கில் சிக்கிக்கொண்டேன். உதவி செய்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு நன்றி” என்று பாகிஸ்தான் சார்ந்த ஒருவர் கூறினார்.