மீண்டும் தங்கபாலுவா? ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியின் பொறுப்பாளராக தங்கபாலு நியமனம்
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவை தொகுதியின் பொறுப்பாளராக கே.வி.தங்கபாலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, அவரது பேச்சை தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் தங்கபாலு மொழிபெயர்ப்பு செய்தார்.
அந்த வேளையில், ஆங்கிலத்தில் ராகுல் காந்தி சொல்லாததை எல்லாம், தமிழில் கூறி தங்கபாலு பரபரப்பை ஏற்படுத்தினார்.இவர் மொழி பெயர்ப்பு செய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதேபோல் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன் என்றும் அவர்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய கல்பெட்டா வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் வந்தார்.ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வந்தனர்.அங்கு ராகுல் காந்தி பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தியும் ,பிரியங்கா காந்தியும் சென்றனர்.
பின்னர் கல்பெட்டாவில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவை தொகுதியின் பொறுப்பாளராக கே.வி.தங்கபாலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.