தனிப்பட்ட கேள்விகள்.? நாடாளுமன்ற குழு விசாரணையில் பாதியில் வெளியேறிய TMC பெண் எம்.பி.!

TMC MP Mahuva Moitra

நாடாளுமன்ற மக்களவையில் அதானி, பிரதமர் மோடி குறித்து கேள்விகள் எழுப்ப பரிசுகள் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது தொழிலதிபர் ஹிராநந்தானி மக்களவைக்கு புகார் எழுதி இருந்தார். இந்த புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.பி நிஷிகாந்த் துபேவும்  மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

மேலும் மஹுவா மொய்த்ரா மீது ,  அதிகாரபூர்வ நாடாளுமன்ற உறுப்பினர் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பகிர்ந்து அதன் மூலம் கேள்விகளை பெற்றார் என்ற புகார் மற்றும், நாடாளுமன்ற மக்களவை தலைவரிடம் தெரிவிக்காமல் 15 முறை வெளிநாடு சென்றதாக எழுந்த புகார் மீதும் நாடாளுமன்ற ஒழுங்கு முறை குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதிகரிக்கும் காற்று மாசு.! டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

இதில் புகார் அளித்து இருந்த நிஷிகாந்த் துபேவிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மஹுவா நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் தொகுதி வேலைகள் இருப்பதாக கூறி , நேற்று (நவம்பர் 2) நாடாளுமன்ற ஒழுங்கு முறை குழு முன்னர் விசாரணைக்கு ஆஜராகினர்.

விசாரணைக்கு ஆஜரான சிறுது நேரத்தில் அங்கிருந்து மஹுவா மொய்த்ரா பாதியில் வெளியேறினார். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மஹுவா புகார் அளித்து உள்ளார்.

அதில், நாடளுமன்ற ஒழுங்கு குழு ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. அதன் தலைவர் வினோத் குமார் சோன்கர் தன்னிடம் அநாகரீகமாக, சில தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டதாகவும் அந்த புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்