டெல்லி: தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாஜக மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்ட (7ஆம் கட்ட) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் இதுவரை 33 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து இன்னும் 9 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இப்படியான சூழலில் , தேர்தல் விதிமுறைகளை மீறி ஆளும் மாநில கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக விளம்பரங்களை பாஜக வெளியிடுவதாக கூறி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இறுந்தது. இந்த வழக்கில் கடந்த மே 22ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் வண்ணம் விளம்பரங்களை வெளியிட பாஜகவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், அரசியல் கட்சிகள் ஆரோக்கியமான தேர்தல் நடைமுறைகளை பின்பற்றி தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும், தவறான தேர்தல் பிரச்சாரங்கள் வாக்காளர்கள் மனதில் தீங்கை விளைவிக்கும் என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கானது, நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வருகையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் (உச்சநீதிமன்றம்) தலையிட எந்த உறுதியான காரணத்தையும் காணவில்லை என்றும், விளம்பரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சி (திரிணாமுல் காங்கிரஸ்) கடுமையாக விமர்சிக்கப்பட்டதை நாங்கள் காண்கிறோம் என்று கூறி வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது.
மேலும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு தீர்ப்புக்கு எதிராக, அதே உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துகொள்ளலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்ற அமர்வு.
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…