லட்டிலும் ஊழியர்கள் பார்த்த துட்டு……….திருப்பதியில் நடந்த அவலம்….!!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் கவுண்ட்டரில் ஒப்பந்த ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 14ம் தேதி கருடசேவையைக் பார்க்க 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். இதையொட்டி டிக்கெட்டை ஸ்கேன் செய்யாவிட்டாலும் லட்டுகளை வழங்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இதில் வ்ளங்கப்பட்ட லட்டுகளும் லட்டுக்களுக்கான டிக்கெட்டுக்களின் எண்ணிக்கையும் ஒத்துப்போகாததால் முறைகேடு வெளிவந்துள்ளது. இந்நிலையில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 ஆயிரம் லட்டுகளை டிக்கெட் ஸ்கேன் ஆகவில்லை என கூறி பக்தர்களுக்கு வழங்காமல் ஒப்பந்த ஊழியர்களே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் இது குறித்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
DINASUVADU