ஊரடங்கிற்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி கோவில்.! ஒரே நாளில் ரூ. 1.02 கோடி வசூல்.!
ஊரடங்கிற்கு திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ. 1.02 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் ஜூன் 11 முதல் ஆந்திராவின் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 12,000க்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கிற்கு பின் முதல்முறையாக திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 1 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வருமானம் கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று திருமலையானை தரிசிக்க 13,486 பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அதனையடுத்து அவர்கள் தானம் செய்தது ஞாயிற்றுக்கிழமை கணக்கிடப்பட்டதாகவும், அதில் உண்டி வருமானமாக ரூ. 1.02 கோடி கிடைத்ததாகவும், ஊரடங்கிற்கு பின்னர் 1 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது இதுவே முதல்முறை என்றும் TTD தெரிவித்துள்ளது.