திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து, இன்று தேவஸ்தானம் சார்பில் சிறப்பு யாகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

Tirupati Laddu Issue - Devasthanam take a special Pua

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய ஆந்திர மாநில ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டன. குறிப்பாக , லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கொழுப்புகள் ஆகியவை இருந்ததாக கூறப்பட்டன.

பக்தர்களுக்கு கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக கூறப்படும் குற்றசாட்டுகள் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்கம் அளிக்கையில், நெய் லிட்டருக்கு தோராயமாக ரூ.350க்கு தான் வாங்கப்படுகிறது. அதற்கு சுத்தமான பசு நெய் கொடுக்கப்படவில்லை. ஏ.ஆர்.நிறுவனத்திடம் (திண்டுக்கல்) இருந்து கடந்த ஜூன் , ஜூலை மாதங்களில் நெய் வந்துள்ளது. அதில் தரம் குறைவான நெய் இருந்தது என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அதற்கு மத ரீதியிலான பரிகாரமாக ‘சிறப்பு தோஷ நிவாரண சாந்தி’ யாகத்தை திருப்பதி கோயில் அர்ச்சகர்கள் நடத்தியுள்ளனர்.  இன்று காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள் மற்றும் 3 ஆகம ஆலோசகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து யாகம் நடத்தியுள்ளனர்.

இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளித்து அதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என திருப்பதி தேவஸ்தான மூத்த நிர்வாகி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
TVK Meeting
upi gst over 2000
Actor Bobby Simha car accident
durai vaiko and vaiko
mk stalin tamilisai soundararajan
Trichy MP Durai Vaiko