திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் ரத்து – தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பொது இடங்களான வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு, பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதன்படி, திருப்பதியிலும் தரிசனம் மே 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இதனால், தேவஸ்தானம் மார்ச் 13 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்த அனைத்து கட்டணத்தையும் திருப்பி செலுத்தியது.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக 4 ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வகளுடன் அமலில் இருக்கும் நிலையில், ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் முன்பதிவு செய்த அனைத்தையும் ரத்து செய்து கட்டணத்தை திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளது.
மேலும், ஸ்ரீவாணி அறக்கட்டளை வாயிலாக ஆன்லைனில் வி.ஐ.பி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களுக்கு மட்டும் ரத்து செய்து கொள்ளும் வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது. எனவே, அவர்களுக்கு மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் போது பக்தர்கள் விரும்பும் தேதியில் ஏழுமலையான் பிரேக் தரிசனம் அளிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025