அடுக்கு புகார்..! நிர்பந்தம்..! திருப்பதி தேவஸ்தான தலைவர் பேக்ஸ் முலம் ராஜினமா கடிதம் ..?
தெலுங்குதேசம் கட்சி ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பதவி ஏற்றது.
இந்நிலையில் அங்கு புதிய அரசு பதவி ஏற்ற உடன் கடந்த ஆட்சியால் நியமிக்கப்பட்ட திருமலை திருப்பதியின் அறங்காவலர் குழு கூண்டாக கலைக்கப்படும் முன்பு அந்தந்த தலைவர்களே தாமாக முன் வந்து ராஜினாமா செய்வது வழக்கம்.
திருப்பதி அறங்குழு தலைவர் இருந்து வரும் சுதாகர் யாதவ் தனது பொறுப்பை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.
இவர் தனது பதவியை கொண்டு தேவஸ்தானம் சார்பில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் முறைகேடாக பணியாளர்களை சேர்க்க வேண்டும் என்று மருத்துவமனை இயக்குனர் ரவிக்குமாருக்கு கடும் அழுத்தம் கொடுத்து உள்ளார்.
இந்த தகவல் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கா காதுக்கு செல்லவே மருத்துவமனை இயக்குனர் ரவிக்குமார் இதனை எழுத்துப்பூர்வமாகவும் புகார் தெரிவித்தார்.
இப்படி தன் மீது புகார் ஒரு பக்கம் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் என்ற தனது பதவியை புட்டா சுதாகர் யாதவ் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் இதற்கான கடிதத்தை அவர் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்காலுக்கு பேக்ஸ் மூலமாக அனுப்பி உள்ளார்.