“திருப்பதி கோவில் ஆந்திரா அரசிடம் இருக்ககூடாது”சுப்பிரமணிய சாமி வழக்கு…!!
திருப்பதி கோவிலை ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், ‘‘ஆந்திர மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட 11 பணக்கார கோவில்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ளன.
அந்த அனுமதியை பயன்படுத்தி, இந்து மக்களின் அடிப்படை, மத, கலாச்சார உரிமைகளை ஆந்திர அரசு பறித்து வருகிறது. கோவில் நிர்வாகத்தில், அறங்காவலர்கள், அர்ச்சகர்கள், பக்தர்கள் ஆகியோரின் கருத்துகளை கண்டு கொள்வது இல்லை. ஆகவே, ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்க அனுமதித்துள்ள சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். கோவிலை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்’’ என்று அவர் கூறி இருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஆந்திர ஐகோர்ட்டை அணுகி நிவாரணம் பெறுமாறு சுப்பிரமணியசாமிக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
DINASUVADU