திருப்பதியில் பிளாஸ்டிக் தடை..!!அமலுக்கு வந்தது…..மீறினால் அபராதம் தேவஸ்தானம் எச்சரிக்கை..!!!
திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவித்திக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறையை கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு அம்மாநில நகராட்சி தடை விதித்தது. இதை தொடர்ந்து தான் திருப்பதி கோவிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்து தேவஸ்தானம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன் படி இன்று(வியாழக்கிழமை) முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த இனி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை உடனே வழக்கத்திற்கு கொண்டு வந்துள்ள கோவில் நிர்வாகம் திருமலைக்கு வரும் பக்தர்களின் உடைமைகளை இன்று முதல் சுகாதார ஆய்வாளர் தலைமையில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் பக்தர்களுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கையையும் அதிகாரிகள் விடுத்துள்ளனர்.இதற்கான முன்னோட்டமாக தேவஸ்தானம் துணிப்பைகளை தயாரித்து உள்ளது.
DINASUVADU